பின்னால் வரும் நிலவு

பின்தொடரும் வொலியால் பின்திரும்ப நானும்
பின்னிவரும் கொடியும் பின்திரும்பி நாணும்
பின்னல்க ளாடும் இன்னல்கள் வாடும்!
உருவத்தைப் பார்க்க முகமொன்றுத் தடுக்கும்
புருவத்தைப் பார்க்க பார்வையைத் தொடுக்கும்
கருவிழியும் பார்க்கும் கண்ணிமையும் தாக்கும்!
காயத்தினால் வுள்ளம் கானகத்தில் வொலமிடும்
சாயத்தினால் வுன்னுதடு மிடம்பார்த்துப் புள்ளியிடும்
சாய்ந்தவுன் சிரமும் கருமையால் கோலமிடும்
இடைவெளிக் குறையும் நிலவோளி நிறையும்!.

நன்றி – வல்லமை மற்றும் ராகுல் ரவீந்திரன்

படக்கவிதை – 28

ஏக்கம்

வீட்டில் நால்வரும் விரல்போலிருக்க
வரும்நேரம் கூடியிங்கு வகுத்திருக்க
வீட்டுபாடம் படித்துவிட்டு விரைந்திருக்க
வந்துபார்க்க வீடும் பூட்டிருக்கு!
கைகளிரண்டும் கோபத்தை கட்டியிருக்க
கண்களில் வந்தேறியது கொப்பளிக்க
பூட்டுடன் மனதுசாவியை ஏங்கியிருக்க
பூட்டிய கைகளிப்ப எங்கிருக்கு?