நீயுறங்கும் பொழுதில்…

ஊஞ்சலாடிய தொட்டிலும் குதித்தாடிய கட்டிலும்
உன்தடம்பதிக்க வரிசையில் கைகட்டி நின்றன
ஊட்டிவிட்ட பொம்மையும் அவிழ்த்துவிட்ட ஆடையும்
உன்விரல்பற்றி வலம்வர தொட்டுப்பிடிக்க வந்தன
ஊதிவிட்ட பலூன்களும் கிழித்துப்போட்ட காகிதமும்
உன்கரம்பட்டு ஆடிட காற்றிலோடி பறந்தன
ஊற்றியெறிந்த புட்டிகள் வண்ணவண்ண டப்பிகள்
உன்கவனத்தை கவர்ந்திட உருண்டோசை எழுப்பின

நீயிருக்கும் வேளையிலே

நீயிருக்கும் தெருக்களில்
மலர்களுக்கு வருத்தம் வரும்
மலர்சரங்களோ ஏக்கத்தில்
கூடையில் சுருண்டு இருக்கும்…
நீநடக்கும் பாதையில்
பார்வைகள் பாய்ந்து வரும்
மணல்களும் கற்களும்
காலணியுடன் போர் தொடுக்கும்…
வுன் பேச்சைக் கேட்டால்
குயில்களுக்கு கோபம் வரும்
செல்ல சிணுங்களுக்கு
சிட்டுகளுடன் இடம் பெயரும்…
தென்னகத்து நிறத்தை கண்டு
மயில்களும் வம்பிழுக்கும்
சிரித்த முகத்தை காண்டால்
சிலைகளுடன் போட்டியிடும்….
போதும்…. பார்வை சரியில்லை
கற்பனைக்கு பா(ர்)வைகள் காரணமல்ல…..

தேன்சிட்டுகள்

அதுவந்து அமர்ந்து பார்த்ததில்லை
பறந்தபடி உண்டதைப் பார்த்ததுண்டு
கீச்சென்றாலும் நிழலைப் பார்த்ததில்லை
சட்டென்று வந்துபோவதை பார்த்ததுண்டு
விளக்கும் வெளிச்சமும் நிறைந்திருக்கும்
கோபுரமும் அலைகளும் இருந்திருக்கும்
தெருக்களில் அவற்றைக் காணவில்லை
மரங்களில் மலர்களில் தேன்சிட்டுகள்!.

பார்வைகள் பலவிதம், அதிலிது ஒரு விதம்

இருக்கும்வரை உறுதியாக இருக்கின்றன மரங்கள்
மலர்வது கனிவது இலையுதிர்வதென சுழண்டாலும்
எந்திரத்தனமான வாழ்வெனமனிதன் நினைத்தாலும்
அடைக்கலம் தருகின்றன பறவைக்கும் மனிதனுக்கும்!
இறக்கும்வரை உறுதியாக இருக்கின்றன பறவைகள்
வளர்வது பறப்பது வலசைபோவதென சுற்றினாலும்
எந்திரத்தனமான வாழ்வெனமரங்கள் நினைத்தாலும்
அடையாளமும் தருகின்றன மண்ணிற்கும் மரத்திற்கும்!

மனதைக் கவர்ந்த பாடல்

காலம் கடந்தும் தென்னகத்தில் ஒரு சில பாடல்களே காதில் கேட்டவுடன், மக்களால் முனுமுனுக்கப் படுகின்றன. தமிழகம் என்று கூறாமல் தென்னகம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் பிறந்து தென்னகத்தின் மற்ற மொழிகளை தாய் மொழியாய் கொண்டவர்களையும் இப்பாடல்கள் சேர்ந்து பாட வைப்பதுண்டு. இவ்வகையான பாடலை எழுத ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அதற்கு உயிர் கொடுத்து ஐம்பது வருடங்கள் கடந்தும் கேட்ட வைக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். வசீகரிக்கும் குரலில் பாடி மனதில் இடம் பிடிக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். எதுவுமே பலர் தொடங்கினாலும், கடைசியில் ஒரு சிலரில் தான் முடியும். அதற்கு  முயற்சி, நம்பிக்கை, ஆற்றல் என காரணங்களை பலர் அடுக்கினாலும், ஒரு சிலரிடம் சென்று கேட்டால் எல்லாம் அவன் அருள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமகாக தெரிந்து இருக்ககூடும், யார் கண்டது?

தொடர்ந்து, பல வருடங்களாக இவர்கள் கூட்டணி அமைத்து மிரட்டிய காலம் அது. ஒருவர் பாட்டெழுத, இருவர் இசையமைக்க, மூவர் பாட, படத்தில் நால்வர் ஆட, மொத்தத்தில் அட்டகாசமான கூட்டணி அது. அதற்கு அப்புறம் 1980 களில் மீண்டும் சில காலம் இதே போல் ஒரு கூட்டணி அமைந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை, கூட்டணி நீடிக்கவில்லை. இனி யாருக்கு வாய்க்குமோ இத்தகைய கூட்டணி, தெரியவில்லை.

பாடல்: ஆறோடும் மண்ணில் எங்கும்
திரைப்படம்: பழனி
பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி
ஆண்டு: 1965

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

மண்ணிலே தங்கம் உண்டு மணியும் உண்டு வைரம் உண்டு
கண்ணிலே காணச் செய்யும் கைகள் உண்டு வேர்வை உண்டு
நெஞ்சிலே ஈரம் உண்டு பாசம் உண்டு பசுமை உண்டு
பஞ்சமும் நோயும் இன்றி பாராளும் வலிமை உண்டு
சேராத செல்வம் இன்று சேராதோ?
தேனாறு நாட்டில் எங்கும் பாயாதோ?

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆரோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பச்சை வண்ணச் சேலை கட்டி முத்தம் சிந்தும் நெல்லம்மா
பருவம் வந்த பெண்ணைப் போலே நாணம் என்ன சொல்லம்மா
நாணம் என்ன சொல்லம்மா
அண்ணன் தம்பி நால்வருண்டு என்ன வேணும் கேளம்மா
அறுவடைக் காலம் உன்தன் திருமண நாளம்மா
திருமண நாளம்மா

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

கைகட்டிச் சேவை செய்து கண்கள் கெட்டு உள்ளம் கெட்டு
பொய் சொல்லிப் பிச்சை பெற்றால் அன்னை பூமி கேலி செய்வாள்
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
தேர் கொண்ட மன்னன் ஏது? பேர் சொல்லும் புலவன் ஏது?
ஏர் கொண்ட உழவன் இன்றிப் போர் செய்யும் வீரன் ஏது?
போர் செய்யும் வீரன் ஏது?

போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம் ஆஆஆ
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

பாடல் வரிகள் உபயம்:-
http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-003/pazhani/aarodum-mannil.php#12pKULmgwukhSDQ8.99

இருளில் வந்த கவிதை

பற்றிட பற்றிடும்
———————
எண்ணையை ஏற்றிடாத நூலும்
எரிந்துவந்த குச்சியின் சாம்பலும்
எண்ணிக்கை குறையும் பெட்டியும்
என்றாவது சொல்லிடும் தலைப்பை!.

பி.கு:- தினந்தோறும் இரவு 7 – 8 மின்தடை தான்.

அச்ச(க)த்தில் காகிகதங்கள்

வண்ணமையும் வருடாத எழுத்துக்கள்
வண்ணமையில் நடமாடு மொவியங்கள்
பதிக்கவரிசையில் முக்கால நிகழ்வுகள்
தவிர்க்கயியலாத இலக்கிய குப்பைகள்!.