பின்னால் வரும் நிலவு

பின்தொடரும் வொலியால் பின்திரும்ப நானும்
பின்னிவரும் கொடியும் பின்திரும்பி நாணும்
பின்னல்க ளாடும் இன்னல்கள் வாடும்!
உருவத்தைப் பார்க்க முகமொன்றுத் தடுக்கும்
புருவத்தைப் பார்க்க பார்வையைத் தொடுக்கும்
கருவிழியும் பார்க்கும் கண்ணிமையும் தாக்கும்!
காயத்தினால் வுள்ளம் கானகத்தில் வொலமிடும்
சாயத்தினால் வுன்னுதடு மிடம்பார்த்துப் புள்ளியிடும்
சாய்ந்தவுன் சிரமும் கருமையால் கோலமிடும்
இடைவெளிக் குறையும் நிலவோளி நிறையும்!.

நன்றி – வல்லமை மற்றும் ராகுல் ரவீந்திரன்

படக்கவிதை – 28

விரல்

இயலோடு இசைவதை வடிக்க
இயல்போடு இணைவதை பிடிக்க
இயல்பாக இருப்பதை படிக்க
இயங்கின இருகை விரல்கள்

ஊஞ்சலாடி

தன்மெயாட வுடன்கால் பறக்க
எதிர்மரமாட மலையும் சாய
விழியால் காண்டமனம் கத்த
தானாட இந்த தரணியாடும்!
மரக்கிளையும் க(ஆ)ட்டிய கயிறும்
காற்றாடிக் கொண்டு இருந்தது…